Facebook

Responsive Ads Here

Friday, May 10, 2019

தமிழில் பயன்படுத்தப்படும் சமஸ்கிருதச் சொற்கள் அவைக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் என்ன?

  • பிறமொழிச் சொற்கள் எனத் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கும் தமிழ்ச் சொற்கள்.
  • இவை அனைத்தும் சுமார் 4.30 மணிநேர இடைவிடாது ,கடின உழைப்பில் உருவாக்கப்பட்டது.
  • இவ் உருவாத்தை அனைவரும் வசித்து பயன்பெறுவீர்கள் என நம்புகிறேன்.
  • இது எனது சொந்த முயற்சில் உருவாக்கப்பட்டது அல்ல. விக்கிப்பீடியா [தமிழ் விக்கிப்பீடியா - தமிழ் விக்கிப்பீடியா] துணைகொண்டு இதனை எழுதினேன்
  • இவை அனைத்தையும் அதாவது [தமிழ்ச்சொற்களை பிறமொழி என் எண்ணிவந்தோம்] அதை இல்லை என நிறுவியவர் திரு : மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் ஐயா அவர்களின் கண்டுபிடித்தார். அவரின் கண்டுபிடிப்புக்களே,கீழ் உள்ள அனைத்து தகவல்களும்.
திரு : மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்
  1. வயது — வயசு : சமஸ்கிருதம்
  2. மனம் — மனசு : சமஸ்கிருதம்
  3. கோடி — கோடி : சமஸ்கிருதம்
  4. வார்த்தை — வார்த்தை : சமஸ்கிருதம்
  5. அருத்தம் — அர்த்தம் : சமஸ்கிருதம்
  6. வாக்கியம் — வாக்கியா : சமஸ்கிருதம்
  7. பதி — பதி : சமஸ்கிருதம்
  8. அதி — அதி : சமஸ்கிருதம்
  9. அதிகம் — அதிகம் : சமஸ்கிருதம்
  10. ஆதி — ஆதி : சமஸ்கிருதம்
  11. அகராதி — அகராதி : சமஸ்கிருதம்
  12. ஆலோசனை — ஆலோசனா : சமஸ்கிருதம்
  13. ஆலயம் — ஆலயா : சமஸ்கிருதம்
  14. பாரதம் — பாரத் : சமஸ்கிருதம்
  15. சுத்தம் — சுத்தம் : சமஸ்கிருதம்
  16. முக்கியம் — முக்கியா : சமஸ்கிருதம்
  17. முகம் — முஹா : சமஸ்கிருதம்
  18. காவியம் — காவ்யா : சமஸ்கிருதம்
  19. இராத்திரி — ராத் : சமஸ்கிருதம்
  20. இரகசியம் — ரகஸ்யா : சமஸ்கிருதம்
  • தமிழில் இருந்து திரிந்து சமஸ்கிதம் சென்ற விதம் இவை.
  1. காமம் — காமம்(க்+ஆ+மம்)>க்ரமம்(க்+ர்+அ+மம்)>. க்ராமம் : சமஸ்கிருதம்
  2. மெது — மெது>ம்ரெது(ம்+ர்+எ+து)>ம்ருது : சமஸ்கிருதம்
  3. மாதங்கம் — மாதங்கம்>மதங்கம்>ம்ரதங்கம்>ம்ருதங்கம் : சமஸ்கிருதம்
  4. படி — படி>ப்ரடி>ப்ரதி : சமஸ்கிருதம்
  5. திருச்சிலாப்பள்ளி(திருச்சி) — திருச்சிலாப்பள்ளி>திருச்சிராப்பள்ளி>திருச்சி>த்ரிச்சி : சமஸ்கிருதம்
  6. பயணம் — பயணம்>ப்ரயணம்>ப்ரயாணம்>ப்ரயாண் : சமஸ்கிருதம்
  7. அமணம் — அமணம்>ஸமணம்(ஸ்+அமணம்)>ஸ்ரமணம் : சமஸ்கிருதம்
  8. பார்ப்பனர் — பார்ப்பனர்>ப்ராப்பனர்>ப்ராம்மனர்> ப்ராமன்(பிராமணர்)>ப்ராமின்(பிராமின் - Anglicized) : சமஸ்கிருதம்
  9. பரமம் — பரமம்>ப்ரமம்>ப்ரம்மம்>ப்ரம்மா : சமஸ்கிருதம்
  10. பிசனை — பிசனை>ப்ரிசனை>ப்ரஷனா : சமஸ்கிருதம்
  11. பதிட்டை — பதிட்டை>ப்ரதிட்டை>ப்ரதிஷ்டை : சமஸ்கிருதம்
  12. பாட்டி — பாட்டி>ப்ராட்டி : சமஸ்கிருதம்
  13. பரதேசம் — பரதேசம்(>பரதேசி)>ப்ரதேசம்>ப்ரதேஷ் : சமஸ்கிருதம்
  14. கதம் — கதம்>க்ரதம்>க்ருதம் : சமஸ்கிருதம்
  15. பாகதம் — பாகதம்(பா+கதம்)>ப்ராக்ரதம்>ப்ரக்ரித் : பிராகிருதம்
  16. அங்கதம் — அங்கதம்>ஸங்கதம்>ஸங்க்ருதம்>ஸங்ஸ்க்ருதம்(இன்னும் சில பிராமணர்கள் பயன்படுத்தும் உண்மையான ஒலிப்பு)>ஸம்ஸ்கிருதம்(தற்கால ஒலிப்பு)>ஸமஸ்கிருதம் : சமஸ்கிருதம்
  17. தமிழ் — தமிழ்(Thamil)>தமில்(Dhamil)>த்ரமில்(Dhramil)> த்ரமித்(Dhramith)>த்ரவித்>த்ரவிட்>த்ராவிட் : சமஸ்கிருதம்
  18. சுதி — சுதி(ச்(ஸ்)+உ+தி)>ஸுதி(ஸ்+உ+தி)>ஸ்ருதி : சமஸ்கிருதம்
சொல்லின் முதலெழுத்தில் ஸ்(S) சேர்த்து ஒலிப்பது.
குறிப்பு: மக்கள் தாங்கள் வாழ்ந்த இடத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப சொற்களை உச்சரிக்கும் தன்மை(இயல்பு) பெறுவர். இதனால் தான், ஆங்கிலத்தில் மற்ற எழுத்துக்களைவிட S எனும் எழுத்தில் தொடங்கும் சொற்கள் அதிகம்.
  1. கந்தம் — கந்தன்>ஸ்கந்தன்(ஸ்+கந்தன்) : சமஸ்கிருதம்
  2. அவை — அவை>ஸவை(ஸ்+அவை)>ஸபை(வ>ப மாற்றம்)>ஸபா(விகுதி நீங்கி விளியாதல்) : சமஸ்கிருதம்
  3. அங்கு — அங்கு>ஸங்கு(ஸ்+அங்கு) : சமஸ்கிருதம்
  4. அங்கம் — அங்கம்(அங்கு+அம்)> ஸங்கம்(ஸ்+அங்கம்) : சமஸ்கிருதம்
  5. அதம் — அதம்>ஸதம்(ஸ்+அதம்) : சமஸ்கிருதம்
  6. அங்கதம் — அங்கதம்>ஸங்கதம்(ஸ்+அங்கதம்) : சமஸ்கிருதம்
  7. தானம் — தானம்>ஸ்தானம்(ஸ்+தானம்)>ஸ்தான் : சமஸ்கிருதம்
  8. தலம் — தலம்>ஸ்தலம்(ஸ்+தலம்)>ஸ்தலா : சமஸ்கிருதம்
  9. திரம் — திரம்>ஸ்திரம்>ஸ்திரா : சமஸ்கிருதம்
  10. வாமி — வாமி>ஸ்வாமி(ஸ்+வாமி) : சமஸ்கிருதம்
  11. அமணம் — அமணம்>ஸமணம்(ஸ்+அமணம்) : பிராகிருதம்
  12. எட்டி — எட்டி>ஸெட்டி(ஸ்+எட்டி) : சமஸ்கிருதம்
  13. ஐந்து —
    ஐந்து(அஇந்து - ஆதியகரம் மறைதல்)>இந்து>ஸிந்து(ஸ்+இந்து) : சமஸ்கிருதம்
  14. குறிப்பு — குறிப்பு>ஸ்குறிப்பு(ஸ்+குறிப்பு)>ஸ்கிரிப்ட் : ஆங்கிலம்
  15. பீடு — பீடு>ஸ்பீடு(ஸ்+பீடு) : ஆங்கிலம்
  16. பின்னு — பின்னு>ஸ்பின்னு(ஸ்+பின்னு)>ஸ்பின் : ஆங்கிலம்
  17. பஞ்சு — பஞ்சு>ஸ்பஞ்சு(ஸ்+பஞ்சு)>ஸ்போஞ் : ஆங்கிலம்
  18. பேச்சு — பேச்சு>ஸ்பேச்சு(ஸ்+பேச்சு)>ஸ்பீச் : ஆங்கிலம்
  19. துடி — துடி>ஸ்துடி(ஸ்+துடி)>ஸ்டுடி : ஆங்கிலம்
  20. கல் — கல்>ஸ்கல்(ஸ்+கல்)>ஸ்கில் : ஆங்கிலம்
சொல்லின் முதலில் உள்ள உயிரெழுத்துடன் ஹகரம் சேர்த்து ஒலித்தல்.
  1. ஓமம் — ஓமம்>ஹ்+ஓமம்>ஹோமம் : சமஸ்கிருதம்
  2. அரசன் — அரசன்>ஹரச>ஹரசா>ஹர்ஷா : சமஸ்கிருதம்
  3. அரி — அரி>ஹரி : சமஸ்கிருதம்
  4. அரன் — அரன்>ஹரன்>ஹரா : சமஸ்கிருதம்
  5. அரியரன் — அரியரன்(அரி+அரன்)>ஹரிஹரன்>ஹரிஹரா : சமஸ்கிருதம்
  6. ஓரை — ஓரை>ஹோரை>ஹோரா(கிரேக்கம், சமஸ்கிருதம்)>ஹவர்(Hour, ஆங்கிலம்)
  • உடம்படுமெய்யுடன் சென்ற சொற்கள்
  • குறிப்பு:இவ்வகைச் சொற்கள் பெரும்பாலும் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு நூல்களை மொழிபெயர்க்கும் பொழுது பொருள் மற்றும் இலக்கணம் தெரியாமல் செல்வன.
  1. உகம் — உகம்>யுகம்(ய்+உகம்)>யுகா : சமஸ்கிருதம்
  2. ஆனை — ஆனை>யானை>யானா : சமஸ்கிருதம்
  3. ஓகம் — ஓகம்>யோகம்>யோகா : சமஸ்கிருதம்
  4. ஓகி — ஓகி>யோகி : சமஸ்கிருதம்
  5. ஓசனை — ஓசனை>யோசனை>யோசனா : சமஸ்கிருதம்
  6. ஆகம் — ஆகம்(ஆகு+அம்)>யாகம்>யாகா : சமஸ்கிருதம்
  7. எந்திரம் — எந்திரம்>யெந்திரம்>யந்த்ரா : சமஸ்கிருதம்
  8. உவன் — உவன்>யுவன் : சமஸ்கிருதம்
  9. உவதி — உவதி>யுவதி : சமஸ்கிருதம்
  10. உத்தம் — உத்தம்>யுத்தம்>யுத்தா : சமஸ்கிருதம்
  11. ஆத்திரை — ஆத்திரை>யாத்திரை>யாத்ரா : சமஸ்கிருதம்
  • பிற தோன்றல் வகைகள்
  1. ஆசாரம் — ஆசாரம்>ஆச்சாரம்>ஆச்சார் : சமஸ்கிருதம்
  2. ஆசாரி — ஆசாரி>ஆச்சாரி : சமஸ்கிருதம்
  3. கலாசாரம் — கலாசாரம்(கலை+ஆசாரம்)>கலாச்சாரம்>கலாச்சார் : சமஸ்கிருதம்
  4. கலாசாரம் — கலாசாரம்(கலை+ஆசாரம்)>கலாச்சாரம்>கலாச்சார்>கல்ச்சர்(Culture) : ஆங்கிலம்
  • வகரம் பகரமாகத் திரிதல்.
  1. வெங்காலூர் — வெங்காலூர்>பெங்காலூர்>பெங்களூர்
  2. வெல்லந்தூர் — வெல்லந்தூர்>பெல்லந்தூர்
  3. வங்காளம் — வங்காளம்>பங்காளம்>பெங்காளம்>பெங்கால்
  4. வேம்பாய் — வேம்பாய்>பேம்பாய்>பம்பாய்
  5. விகாரம் — விகாரம்>விஹாரா(Vihara)>பீகார்(Bihar)
  6. உவநிடதம் — உவநிடதம்>உபநிடதம் : சமஸ்கிருதம்
  7. வல்லவன் — வல்லவன்>வல்லபன்>வல்லபா : சமஸ்கிருதம்
  8. அவை — அவை>ஸவை(ஸ்+அவை)>ஸபை>ஸபா : சமஸ்கிருதம்
  9. உருவம் — உருவம்>ருவம்>ரூவம்>ரூபம்(வ->ப மாற்றம்)>ரூபா : சமஸ்கிருதம்
  10. கோவிந்தன் — கோவிந்தன்>கோவிந்த்>கோபிந்த் : சுமேரியஅன்ன
  11. வேல் — வேல்(Vel)>பேல்(Bel) : கன்னடம்
  12. வெள்ளை — வெள்ளை>பெள்ளை>பெலா : கன்னடம்
  13. வெல்லம் — வெல்லம்>பெல்லம் : கன்னடம்
  14. வா — வா>பா : கன்னடம்
  15. வரா — வரா>பரா : கன்னடம்
  16. வேண்டாம் — வேண்டாம்>வேண்டா>பேண்டா>பேடா : கன்னடம்
  • சொல்லில் உள்ள சகர உயிர்மெய் ஜகர உயிர்மெய்யாகத் திரிதல்.
  1. செயம் — செயம்>ஜெயம்>ஜெயா : சமஸ்கிருதம்
  2. சீவன் — சீவன்>ஜீவன்>ஜீவா: சமஸ்கிருதம்
  3. ஆசீவகம் — ஆசீவகம்>ஆசீவகா>ஆஜீவிகா : சமஸ்கிருதம்
  4. சீவகம் — சீவகம்>சீவகா>ஜீவகா : சமஸ்கிருதம்
  5. சோதி — சோதி>ஜோதி : சமஸ்கிருதம்
  6. சோதியம் — சோதியம், சோதிடம்>ஜோஷ்யம், ஜோதிடம்>ஜோதிடா : சமஸ்கிருதம்
  7. பூசை — பூசை>பூஜை>பூஜா : சமஸ்கிருதம்
  8. சலம் — சலம்>ஜலம் : சமஸ்கிருதம்
  9. சல்லிக்கட்டு — சல்லிக்கட்டு>ஜல்லிக்கட்டு : சமஸ்கிருதம்
  10. சாதகம் — சாதகம்>ஜாதகம் : சமஸ்கிருதம்
  11. சீரணம் — சீரணம்>ஜீரணம் : சமஸ்கிருதம்
  • தகர வல்லினம் மிகும் இடத்தில் தகரம் ஸகரமாகத் திரிதல்.
  1. அகத்தியர் —அகத்தியர்>அகஸ்தியர்>அகஸ்தியா : சமஸ்கிருதம்
  2. சூத்திரம் —சூத்திரம்(சூழ்+திரம்)>சூஸ்திரம்>சூஸ்த்ரா: சூத்ரா, சூஸ்த்ரா (சமஸ்கிருதம்)
  3. சாத்தன் — சாத்தன்>சாஸ்தன்>சாஸ்தா : சமஸ்கிருதம்
  4. சாத்திரம் — சாத்திரம்>சாஸ்திரம்>சாஸ்த்ரா : சமஸ்கிருதம்
  5. பொத்தகம் —பொத்தகம்>புத்தகம்>புஸ்தகம்>புஸ்தக் : சமஸ்கிருதம்
  • சொல்லில் உள்ள வல்லின மெய் (அ) உயிர்மெய் ஷகர மெய் (அ) உயிர்மெய்யாகத் திரிதல்
  1. இலக்கம் — இலக்கம்>லக்கம்>லக்ஷ : சமஸ்கிருதம்
  2. இலக்கம் — இலக்கம்>லக்கம்>லக்ஷ>லஷ்மி : சமஸ்கிருதம் [லஷ்மி>இலக்குமி(தமிழ்) திருமகள்]
  3. நக்கத்திரம் —நக்கத்திரம்(நகு+அம்+திரம்)>நட்ஷத்திரம், நக்ஷத்திரம்>நக்ஷத்ரா : சமஸ்கிருதம்
  4. சத்தி — சத்தி>சக்தி>ஷக்தி : சமஸ்கிருதம்
  5. ஆசை — ஆசை>ஆசா>ஆஷா : சமஸ்கிருதம்
  6. விண்ணு — விண்>விண்ணு>விட்ணு>விஷ்ணு : சமஸ்கிருதம்
  7. வேட்டி — வேட்டி>வேஷ்டி : சமஸ்கிருதம்
  8. அட்டம் — அட்டம்>அஷ்டம்>அஷ்ட : சமஸ்கிருதம்
  9. இட்டம் — இட்டம்>இஷ்டம்>இஷ்ட : சமஸ்கிருதம்
  10. கட்டம் — கட்டம்>கஷ்டம்>கஷ்ட : சமஸ்கிருதம்
  11. நட்டம் — நட்டம்>நஷ்டம்>நஷ்ட : சமஸ்கிருதம்
  12. வருடம் — வருடம்>வருஷம்>வர்ஷா : சமஸ்கிருதம்
  • பிற திரிதல் வகைகள்.
  1. அமிழ்தம் — அமிழ்தம்>அமிர்தம்>அமிர்தா : சமஸ்கிருதம்
  2. எருமையூர் — எருமையூர்>மையூர்>மைசூர் :
  3. காளிக்கோட்டம் —காளிக்கோட்டம்>கல்கத்தா>கொல்கத்தா
  4. திருவாமையூர் —திருவாமையூர்(திரு+ஆமையூர்)>திருவான்மியூர் :
  5. நேயம் — நேயம்(நேய்+அம்)>நேசம்>நேஷம் : சமஸ்கிருதம்
  6. கற்பனை — கற்பனை>கற்பனா>கல்பனா : சமஸ்கிருதம்
  7. பகவன் — பகவன்>பகவான் : சமஸ்கிருதம்
  8. சுதந்திரம் — சுதந்திரம்>ஸ்வதந்த்ரா : சமஸ்கிருதம்
  • மறைதல்
  • சொல்லின் முதலில் உள்ள அகரம் மறைதல்
  1. அரிசி — அரிசி>ரிசி>ரைஸ் : ஆங்கிலம்
  2. அரத்தம் — அரத்தம்>ரத்தம் : சமஸ்கிருதம்
  3. அரம்பம் — அரம்பம்>ரம்பம் : சமஸ்கிருதம்
  4. ஐந்து —ஐந்து(அஇந்து)>இந்து>ஸிந்து(ஸ்+இந்து) : சமஸ்கிருதம்[ஐந்து நதி>இந்து நதி, ஐந்து நதிகள் கொண்டது]
  5. இந்திரன் — இந்திரன்>இந்த்ரா : சமஸ்கிருதம்
  6. அரணவம் — அரணவம்>ரணவம்>ராணுவம் : சமஸ்கிருதம்
  7. அரசன் — அரசன்>ரசன்>ரசா(விகுதி நீங்கல்)>ரஜா>ராஜா>ராஜ் : சமஸ்கிருதம்
  8. அரங்கம் — அரங்கம்>ரங்கம்>ஸ்ரீரங்கம் : சமஸ்கிருதம்
  • சொல்லின் முதலில் உள்ள இகரம் மறைதல்.
  1. இலக்கம் — இலக்கம்>லக்கம்>லக்ஷ : சமஸ்கிருதம்
  2. இலக்கம் — இலக்கம்>லக்கம்>லக்ஷ>லஷ்மி : சமஸ்கிருதம்
  • சொல்லின் முதலில் உள்ள உகரம் மறைதல்.
  1. உலகம் — உலகம்>லகம்>லோகம்>லோகா : சமஸ்கிருதம்
  2. உருத்திரன் —உருத்திரன்>ருத்திரன்>ருத்ரன்>ருத்ரா : சமஸ்கிருதம்
  3. உருவம் — உருவம்>ருவம்>ரூவம்>ரூபம்(வ->ப மாற்றம்)>ரூபா : சமஸ்கிருதம்
  4. பூவுலகம் —பூவுலகம்(பூ+உலகம்)>பூலகம்>பூலோகம் : சமஸ்கிருதம்
  • சொல்லின் கடையில் உள்ள விகுதி நீங்கி அகரம் (அ) ஆகாரம் சேருதல்.
  1. வேதம் — வேதம்(வேது+அம்)>வேதம்>வேதா : சமஸ்கிருதம்[வேதா>வேதம்(தமிழ்), மறை. வேய்தல், வேதல் என மருவியது]
  2. ஈசன் — ஈசன்>ஈசா : சமஸ்கிருதம்
  3. சூத்திரம் — சூத்திரம்(சூழ்+திரம்)>சூத்திரா>சூத்ரா : சமஸ்கிருதம்
  4. மந்திரம் — மந்திரம்(மன்+திரம்)>மந்திரா>மந்த்ரா : சமஸ்கிருதம்
  5. மாயம் — மாயம்(மாய்+அம்)>மாயா : சமஸ்கிருதம்
  6. கலை — கலை(கல்+ஐ)>கலா : சமஸ்கிருதம்
  7. சித்தம் — சித்தம்>சித்தா : சமஸ்கிருதம்
  8. கோத்திரம் — கோத்திரம்(கோ+திரம்)>கோத்திரா>கோத்ரா : சமஸ்கிருதம்
  9. வைத்தியம் — வைத்தியம்(வைத்து+இயம்)>வைத்தியா>வைத்யா : சமஸ்கிருதம்
  10. நாதன் — நாதன்>நாதா : சமஸ்கிருதம்
  11. காண்டம் — காண்டம்>கண்டா :சமஸ்கிருதம்
  12. தூரம் — தூரம்>தூர் : சமஸ்கிருதம்
  13. குலம் — குலம்>குலா : சமஸ்கிருதம்
  14. அதிகாரம் — அதிகாரம்>அதிகாரா : சமஸ்கிருதம்
  15. அகங்காரம் — அகங்காரம்>அகங்காரா : சமஸ்கிருதம்
  16. ஆகாயம் — ஆகாயம்>ஆகாசம்>ஆகாஸம்>ஆகாஸ்>ஆகாஷ் : சமஸ்கிருதம்
  17. ஞானம் — ஞானம்>ஞான் : சமஸ்கிருதம்
  18. விஞ்ஞானம் — விஞ்ஞானம்(விண்+ஞானம்)>விஞ்ஞான் : சமஸ்கிருதம்
  19. விமானம் — விமானம்(வீ+மானம்)>விமானா : சமஸ்கிருதம் [விமான்>விமானம்(தமிழ்), உயரத்தில்(வீ) நிலைபெறும் தன்மை கொண்டது(மானம்)]
  20. காமம் — காமம்>காமா : சமஸ்கிருதம்
  21. ஆதாரம் — ஆதாரம்>ஆதாரா : சமஸ்கிருதம்
  22. உதாரணம் — உதாரணம்>உதாரண் : சமஸ்கிருதம்
  23. காவியம் — காவியம்>காவ்யா : சமஸ்கிருதம்
  24. ஆலயம் — ஆலயம்>ஆலயா : சமஸ்கிருதம்
  25. காரணம் — காரணம்>காரண் : சமஸ்கிருதம்
  26. கடிகை — கடிகை>கடிகா : சமஸ்கிருதம்
  27. அகரம் — அகரம்>அகரா : சமஸ்கிருதம்
  28. அதிகம் — அதிகம்>அதிகா : சமஸ்கிருதம்
  29. அதிகாரம் — அதிகாரம்>அதிகாரா : சமஸ்கிருதம்
  30. மண்டலம் — மண்டலா : சமஸ்கிருதம்
  • பிற மறைதல் வகைகள்
  1. கடிகையாரம் —கடிகையாரம்(கடிகை+ஆரம்)>கடியாரம்>கடிகாரம்>கடிகாரா : சமஸ்கிருதம்
  2. மோரியர் — மோரியர்>மௌரியர்>மௌரியா : பிராகிருதம்
  3. சார்தி — சார்தி(சார்+தி)>சாதி>ஜாதி : சமஸ்கிருதம்

No comments:

Post a Comment