Facebook

Responsive Ads Here

Friday, May 10, 2019

தமிழில் அர்த்தமுள்ள ஓரெழுத்து சொற்கள் என்னென்ன?

தமிழில் அர்த்தமுள்ள ஓரெழுத்து சொற்கள் என்னென்ன?


  1. அ — எட்டு, இன்மை, எதிர்மறை, குறைவு, சம்மதி, சாரியை, அந்த, சுட்டு, தடை, பிறிது, வியப்பு, சுக்கு, திப்பிலி, சிவன், மாயோன் [விஷ்ணு], பிரமன்.

  1.  — ஆவின் [பசு], இசை, இரக்கம், பெண்மரை, பெண்ணெருமை, சிவஞானம், வியப்பு,
  2.  — அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, உண்டி, கேட்டி, குறத்தி, வில்லி, ஊருணி, செவியிலி, எண்ணி.
  3.  — கொடு, பறக்கும் பூச்சி, அம்பு, அரைநாண், இந்திரவில், இலக்குமி, கொக்கு, கலைமகள் [சரசுவதி], தாமரையிதழ், பாம்பு, வண்டு.
  4.  — சிவன், உருக்கம், கட்டளை, சினம் [கோபம்], இணக்கம் [சம்மதி], செய்து, பிரமன்.
  5.  — தசை, இறைச்சி, உணவு, திங்கள் , சமாக்கியகலை, சிவன், ஊன்.
  6.  — வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்,
  7.  — அம்பு, சிவன், செலுத்துதல், மாயோன் [விஷ்ணு], அடே, அம்பு, இகழ்ச்சிக்குறி, இசைநிறை, ஈற்றசை.
  8.  — ஐந்து, அழகு, தலைவன், வியப்பு, அரசன், ஆசான், கடுகு, சர்க்கரை, தும்பை, துர்க்கை, நுண்மை, மருந்து, பெருவியாதி, இருமல், கடவுள், குரு, கோழை, சிவன், வந்தனை.
  9.  — ஒழிவு,
  10.  — வினா, மதகு - நீர் தாங்கும் பலகை, அயன், அரன், அழைத்தல், கருணை.
  11. ஒள — பூமி, மகிழ்ச்சி, அழைத்தல், வியப்பு, தடை, கடித்தல்.
  12. கா — சோலை, காத்தல், காவடி, துலை, தோட்சுமை, பூந்தோட்டம், வருத்தம்.
  13. கு — இருள், குற்றம், வருகுதி, சிறுமை, தடை, தொனி, நிந்தை, நன்கு, போக்கு, பூமி.
  14. கூ — பூமி, கூவுதல், மலங்கழித்தல்.
  15. கை — கரம், உறுப்பு, இடம், உடனே, ஒப்பனை, ஒழுக்கம், கடுக்கை, சாமர்த்தியம், சிறுமை, தங்கை, தொனி, பக்கம், படைவகுப்பு, துதிக்கை, வரிசை.
  16. கோ — அரசன், தலைவன், இறைவன், அம்பு, ஆகாயம், ஆண்மகன், இடியேறு, இரக்கக்குறிப்பு, இலந்தை, உரோமம், எருது, கண், கிரகணம், நிலா, கதிரவன், திசை, கோமேதயாகம், தேவலோகம், நீர், பசு, பூமி, பொறிமலை, மாதா, மேன்மை, வச்சிராயுதம், வாணி, வெளிச்சம்.
  17. சா — இறப்பு, மரணம், பேய், சாதல்.
  18. சீ — இகழ்ச்சி, திருமகள், அடக்கம், இலக்குமி, காந்தி, சம்பத்து, சரச்சுவதி, சீதல், நித்திரை, பார்வதி, பிரகாசம், பெண், விடம், விந்து.
  19. சே — எருது, அழிஞ்சில் மரம், சிவப்பு, சேரான்மரம்.
  20. சோ — மதில், உமை
  21. ஞா — பொருத்து, கட்டு
  22. தா — கொடு, கேட்பது, அழிவு, குற்றம், கேடு, கொடியன், தாண்டுதல், பகை, பாய்தல், பிரமன், வருத்தம், வலி, வியாழம்.
  23. தீ — நெருப்பு, அறிவு, இனிமை, உபாயவழி, கொடுமை, தீமை, நரகம்.
  24. து — கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு, அசைத்தல், அநுபவம், எரித்தல், கெடுத்தல், சேர்மானம், நடத்தல், நிறைத்தல், பிறவினை, விகுதி, வருத்தல், வளர்தல்.
  25. தூ — வெண்மை, தூய்மை, சீ, தசை, பகை, பற்றுக்கோடு, புள்ளிறகு.
  26. தே — நாயகன், தெய்வம், கிருபை.
  27. தை — மாதம், தைத்தல், பூசநாள், மகராசி.
  28. நா — நாக்கு, அயலார், சுவாலை, திறப்பு, நடு, பொலிவு
  29. நீ — நின்னை
  30. நூ — யானை, எள், அணிகலன்.
  31. நே — அன்பு, நேயம்.
  32. நை — வருந்து, நைதல், இகழ்ச்சிக்குறிப்பு
  33. நொ — நொண்டி, துன்பம், நோய், வருத்தம்
  34. நோ — நோவு, வருத்தம், சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், வியாதி.
  35. நௌ — மரக்கலம்பா
  36. பா — பாட்டு, நிழல், அழகு, கடிகாரவூசி, கிழங்குப்பா, நிழல், நெசவுபா, பஞ்சிநூல், பரப்பு, பரவுதல், பிரபை, வெண்பா
  37. பூ —மலர், அழகு, இடம், இந்துப்பு, இருக்குதல், இலை,ஒருகண்ணோய், ஒருநரகம், கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, பூமி, பொலிவு,
  38. பே — முகில், நுரை, அழகு
  39. பை — பாம்புப் படம், பசுமை, உறை, அழகு, குடர், சாக்கு, நிறம், பச்சைநிறம்,பொக்கணம், மந்தக்குணம், மெத்தெனவு.
  40. போ — செல், பிரியின்வாழாதென்போ.
  41.  — திங்கள், எமன், என்மர், ஒருமந்திரம், காலம், சிவபிரான், நஞ்சு, நேரம், பிரமன், விட்டுனு.
  42. மா — மாமரம், பெரிய, விலங்கு, அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி, இடித்தமா, இடை, இலக்குமி, எதிர்மறை, யுபசருக்கம், ஐயவுபசருக்கம், ஓரெண், ஒருமரம், கட்டு, கறுப்பு, கலைமகள், சீலை, செல்வம், தாய், துகள், நஞ்சுக்கொடி, நிறம், பரி, பிரபை, பெரிய, பெருமை, இறப்பு, மிகுதி, மேன்மை, வண்டு, வயல், வலி, வெறுப்பு.
  43. மீ — ஆகாயம், மேலே, உயரம், மகிமை, மேல், மேற்புரம்.
  44. மு — மூப்பு
  45. மூ — மூன்று, மூப்பு.
  46. மே — மேன்மை, மேல், அன்பு.
  47. மை — மை[அஞ்சனம்], கண்மை, இருள், எழுதுமை, கருப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடி, மலட்டெருமை, மேகம், மேடவிராசி, வெள்ளாடு.
  48. மோ — முகர்தல், மோதல், கேண்மோ.
  49. யா — அகலம், மரம், சந்தேகம், இல்லை, யாபன்னிருவர்.
  50. வா — அழைத்தல்
  51. வீ -----> பறவை, பூ, அழகு, கருப்பந்தரித்தல், சாவு, சொல்லுதல், நீக்கம், போதல், விரும்புதல்.
  52. வை — வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல், புல், வையகம்,
  53. வௌ — கௌவுதல், கொள்ளை அடித்தல்
  54.  — தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
  55. ளு — நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
  56. று — எட்டில் ஒரு பகுதி அரைக்கால் என்பதன் வடிவம்.

No comments:

Post a Comment